Monday, March 11, 2013

வைரஸ்.. பக்ரீரியா எல்லாம் கிளவராகிட்டே போறாங்க. நமக்கு ஆப்புத் தான் போல..!



பிரித்தானிய உயிரியலாளர்.. சேர் அலக்ஸாண்டர் பிளமிக்.. எதேட்சையாக கண்டுபிடித்த பென்சிலினில் இருந்து ஆரம்பித்த மருந்துகளுக்கு எதிரான  போராட்டத்தில் பக்ரீயாக்கள் மற்றும் நுண்ணங்கிகள்.. வெற்றிகரமாக ஆனால் உறுதியான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால்.. மனித இனம் உலகில் மிகப்பெரிய நெருக்கடி ஒன்றைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.



மனித வரலாற்றின் ஆரம்ப காலத்தில் ஏன் அந்தளவிற்குப் போவான்.. உலகப் போர்களுக்கு முன்னைய காலத்தில் கூட நோய்க் கிருமிகளின் தொற்றுக்கு மருந்து எடுத்தால் சுகமாகிடும் என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் உலகப் போர்கள் தந்த பல பாதகமான விளைவுகள் மத்தியில் இருந்து பிறந்த நோய்க்கிருமிகளுக்கு எதிரான மருந்துகளின் பாவனை என்பது நோய்த் தொற்றுக் கண்டால் குறிப்பாக பக்ரீரியா தொற்றுக் கண்டால்.. மருந்தெடுத்தால் சுகமாகிடும் என்ற நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது.



ஆனால் பகிரீரியாக்களோ மிகவும் புத்திசாலிகளாக உள்ளன. நாம் எந்த மருந்தை அவற்றைக் கொல்லப் பாவிக்கிறோமோ அதே மருந்திற்கு எதிர்ப்புக்காட்டும் வரையில் அவை தம்மை இயற்கையில் குறிப்பாக அவற்றின் பிறப்புரிமையியலில் மாற்றத்தினை உருவாக்கி அதன் மூலம் பெறப்படும்.. பலவேறு பொறிமுறைகளையும் பாவித்து மருந்துகளைச் செயலிழக்கச் செய்யும் நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டு.. மருந்துகளுக்கு சவால்விடும் நிலைக்கு வந்துவிடுகின்றன.



இதனால்.. முன்னர் அவற்றிற்கு எதிராகப் பாவித்த மருந்துகளை தொடர்ந்து பாவிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. புதிதாக உருவாகும் பக்ரீரியாக்களை கொல்ல மருந்துகளை தேடி ஓட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றி எமது உடலுக்கும் அவற்றை எதிர்க்கிற ஆற்றலை நாம் மருந்துகளை எடுத்து வழங்காமல் செய்துவிடுகிறோம். இப்படி பல குழறுபடிகளால்.. இன்று மனித இனம் நாடியில் கைவைச்சிட்டு இருக்கிற அளவிற்கு.. நோய் உருவாக்கும் நுண் உயிரினங்கள் (வைரஸ்.. பக்ரீரியா.. மலேரியாவை உருவாக்கும் புரட்டோசோவன்கள் மற்றும் பங்கசுகள்) தம்மை தகாத சூழலுக்குள் இருந்து வெற்றிகரமாக விடுவித்துக் கொண்டு பல்கிப் பெருகி வருகின்றன.



நுண்ணுயிரிகளின் வாழ்க்கை வட்டம் சிறிது என்பதால்.. அவற்றில் பிறப்புரிமையியல் விகாரங்கள்.. மாறல்களாக விரைவாக சந்ததிகளை கடந்து வருவதால்.. புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கிடையில்.. அவை நோய்களால் மனிதர்களை விழுத்திவிடும் ஆபத்து.. உலகின் மீது பயங்கர அணு குண்டு ஒன்று எந்த நேரமும் வீசப்படலாம் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது.

இதில் இருந்து விடுபட வேண்டின்.. மருந்துகளின் பாவனையில் ஒரு முறையான ஒழுங்கமைப்பும்.. புதிய மருந்துகளின் வருகையும்.. மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் நுண்ணியிரிகள் மீதான கவனமும்.. தொடர்ந்து உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எமது உடலை இவற்றிற்கு எதிராகப் போராட தயார்ப்படுத்தும் நிலையும் (குறிப்பாக வாக்சின்கள் - vaccines மூலம்) அவசியமாகியுள்ளது.

உண்மையில்.. இது.. மனிதர்கள் உயிரின அறிவியலின் பூரணத்துவம் இன்றி.. ஆரம்பத்தில் விட்ட தவறுகளின் தொடர்ச்சி என்றால் மிகையல்ல..!

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:35 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க